படம் - வானவில் பொழுதுகள்
இயக்கம் - ராம் கணேஷ்
என் வாழ்க்கை வானத்தில்
வானவில் பொழுதது...
கண்ணீரின் ஈரத்தில்
சாயங்கள் கரையுது...
நெஞ்சத்தின் மொத்தத்தில்
நினைவுகள் நிறையுது...
உயிரின் மிச்சத்தில்
நாட்கள் நகருது...
காலத்துக்கு நிச்சயம்
கால்கள் வேண்டுமா? கேட்டு கேட்டு கோபம் எரியுது...
இன்னும் அஞ்சு நிமிஷம்னு
ஆறாயிரம் முறை ஸ்னூஸான
அலாரத்துக்கு விடிவுகாலம் பிறக்கவில்ல...
இன்னைக்கும் துவைக்கல
இருந்தும் அவன் அழுக்கு சட்டை
என்ன அழகாய் காட்ட தவறவில்ல...
காச்சல் அடிக்குது ரெகார்ட் எழுதல
அட்டெண்டன்சை தின்பதற்கு
இல்லாத காரணமில்ல
சல்வார் ரோஜா அவள்
சிறகில்லா ஏஞ்சல் மச்சான்
என்று சொல்லாத நாளும் இல்ல
என் வாழ்க்கை வானத்தில்
வானவில் பொழுதது
சந்தோசம் சோகம் என்று
எண்ணூறு வண்ணமதில்
சொல்லாத காதல்கள்
செல்லாத கவிதையாய்
பதியாத மேசையில்ல
மச்சான்னு மாமான்னு
சேர்ந்த சொந்தங்கள்
எதிரேதும் பார்த்ததில்ல
நாலு பேரு மறந்ததால
எழுதி வந்த மொத்த பேரின்
ஆசைன்மென்ட்டும் குப்பையில
பீரடிச்சவன் சிக்கையில
சும்மா சைடுடிஷ் சிக்கன் தின்னவனும்
ப்ரின்சிபாலிடம் தப்பவில்ல
ஒருத்தன் செஞ்சா தப்புன்னு
பேசிய ரூல்ஸ்க்கு எல்லாம்
சேர்ந்து எல்லாரும் செய்யயில்ல
வாய் பேச வார்த்தையில்ல
என் வாழ்க்கை வானத்தில்
வானவில் பொழுதது
சந்தோசம் சோகம் என்று
எண்ணூறு வண்ணமதில்
கூட்டத்தில் அஞ்சு பேரு
ஆபர் லெட்டர் வாங்கையில
ஒருத்தன் மட்டும் அறியார் பேப்பர் சுமந்தான்
இருந்தும் சிரிப்புக்கு பஞ்சமில்ல
என்ன என்னமோ எழுத நினச்சு
பக்கம் நனைச்ச கண்ணீரைத் தவிர
ஸ்லமில் எழுத மட்டும் வார்த்தையில்ல
சொல்லாம போனது
சொல்லி செல்லாம போனது
வாழ்கை கேட்ட கேள்விக்கு
என் காதல்மட்டும் பதிலில்ல
என் வாழ்க்கை வானத்தில்
வானவில் பொழுதது...
கண்ணீரின் ஈரத்தில்
சாயங்கள் கரையுது...
நெஞ்சத்தின் மொத்தத்தில்
நினைவுகள் நிறையுது...
உயிரின் மிச்சத்தில்
நாட்கள் நகருது...
காலத்துக்கு நிச்சயம்
கால்கள் வேண்டுமா? கேட்டு கேட்டு கோபம் எரியுது...