Friday, June 20, 2014

♥ தேவதை வந்துவிட்டாள் ♥

Read the English version of story here :)

oOo

இம்மியளவும் குறையாத காதல், நேற்று திருமணமான ஜோடியின் சந்தோசம் இருவர் முகத்திலும் . ராம் ஸ்வேதா. நேற்றோடு ஐந்தாண்டுகள் ஆனதென்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். [சரி சரி கண்ணு போடாதிங்கப்பா!!]

சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு போனாலே இன்னைக்கு வயசு பசங்களுக்கு ஒரு பிரச்சன இருக்கு. எப்ப உனக்கு கல்யாணம்? அடுத்து நீ தானா? சரி கல்யாணம் பண்ண தப்பித்திடலாம் அப்படின்னு நினச்ச, வீட்டுல ஏதாவது விஷேசமா? [ குழந்தை பிறந்த பிறகு இந்த பிரச்சன ஓய்ந்துவிடும் அப்படின்னு நினைக்கிறிங்க? இல்லை! உங்க குழந்தைட்ட பொய் அம்மாட்ட/அப்பாட்ட தம்பி பாப்பா கேளு கண்ணா அப்படின்னு கிளப்பி விடுவாங்க. டேய்!! :evil: ]

ராம் ஸ்வேதாவும் அந்த தொல்லையிலிருந்து தப்பிக்க முடியவில்லை. நிறைய நேரம் ராம் ஸ்வேதாக்கு நாங்க என்னைக்காவது எதோ ஒரு பாட்டி இறந்த துஷ்டி வீட்டில் இந்த ஆண்டிகளை பார்த்து "அடுத்து நீங்கதானா?" என்று கேட்டதுண்டா  என்று கூட தோன்றும். (Fb-la suttathu) ஏன் யாருக்கும் திருமணம் என்பது அதற்கு மட்டுமில்லை என்று புரிய மாட்டேன் என்கிறது என்று ராமும் ஸ்வேதாவும் தினமும் நொந்து கொள்வதுண்டு.

ஒரு வழியாய் கடவுள் கருணை காட்டிவிட்டார். இனி எவன் கேட்க்கும் நச்சரிக்கும் கேள்விக்கு நின்று பதில் சொல்ல தேவை இல்லை. மீறி கேள்வி கேட்க வாயை திறந்தாலும், லட்டை வாயில் வைத்து அடைத்துவிடலாம். லட்டு? அப்படி என்ன சந்தோசமான செய்தி என்று கேட்கிறீர்களா? ராமும் ஸ்வேதாவும் ஆவலுடன் காத்திருந்த அந்த நற்செய்தி வந்துவிட்டது. :D

ஆணென்ன? பெண் என்ன? ராமிற்கும் ஸ்வேதாவிற்கும் தேவை, தங்கள் காதலை, அன்பை, சந்தோசத்தை, கம்பளியை பங்கு போட்டு கொள்ள இன்னுமொரு ஆள்  அவ்வளவு தான்.

அவங்க ஏற்கனவே  தேதி குறித்து சொல்லி விட்டார்கள். ராம் கடைசி நேரத்தில் அரக்க பறக்க விரும்பவில்லை. எனவே முன்கூட்டியே வாடகை வாகனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தான். அங்கே தேவை படும் பொருட்களையும் தனி பெட்டியில் எடுத்து வைத்திருந்தான். ஸ்வேதாவின் முகத்தில் :roll: பயத்தின் ரேகையை ராமால் உணர முடிந்தது.  ராம் போருட்படுத்திக்கொள்ளவில்லை. கொஞ்ச நேரத்தில் எல்லாம் பறந்து போய்விடும் என்று அவனுக்குத் தெரியும்.

வண்டியும் வந்து சேர்ந்தது. ஸ்வேதா ஏற உதவி செய்துவிட்டு, பொருட்கள் இருந்த பெட்டியையும் ஏற்றிவிட்டு தானும் ஏறிக்கொண்டான் ராம். வண்டி சென்னை நெரிசல் கிழித்துக்கொண்டு மிதக்கத்தொடங்கியது.

ஸ்வேதா கண்களை இருக்க மூடிக்கொண்டு, ராமின் கரங்களை கட்டி பிடித்து உட்கார்ந்துகொண்டாள். முதல் நாள் பள்ளிக்கு டெட்டி பியரை இருக்க பிடித்து உட்கார்ந்துகொண்டு போகும் குழந்தையின் பாவத்தோடு,

சிரித்துக்கொண்டே ராம் ஸ்வேதாவை இன்னும் இருக்க அணைத்து உட்கார்ந்துகொண்டான். ஸ்வேதாவால் ராமின் இருதயத் துடிப்பை இப்பொழுது உணர முடிந்தது. உலகத்தில் வேறு ஒரு சுகமான இசை இருக்கிறதா என்ன? அந்த இசையின் பரிவில் ராமின் மார்பில் ஸ்வேதா உறங்கி போனாள்.

அவர்கள் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். "லிட்டில் ஹார்ட்ஸ் - பட்டாம்பூச்சிகளின் தோட்டம்" என்ற பெயர் பலகையும், குழந்தைகளின் புன்னகையும் அவர்களை வரவேற்றது. :)
இன்னும் பயம் தெளியாமலே தான் ஸ்வேதா இறங்கி, குழந்தைகளோடு நடக்கத்தொடங்கினாள். ராம் கொண்டுவந்திருந்த பெட்டியிலிருந்து குழந்தைக்களுக்கு கொடுக்க மிட்டாய்களை எடுத்துக்கொண்டிருந்தான்.

மிட்டாய் எடுத்துவிட்டு, ஸ்வேதாவை தேடிய ராம் ஸ்வேதாவும் குழந்தைகளோடு குழந்தை ஆகி :D இருந்ததை பார்த்து சிரித்துக்கொண்டே குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுக்கத் தொடங்கினான்.

அப்பொழுது அங்கே இல்லத்தின் சகோதரி வந்தார்கள்.

சகோதரி : வாங்க ராம். ஸ்வேதா குழந்தையாகவே ஆகிவிட்டாளா?  *சிரித்தார்கள்*. :)

ராம் : ஆமாம் மேடம். ஸ்வேதா குழந்தைக்களை பார்த்துவிட்டால் உலகத்தையே மறந்துவிடுவாள். :)

ராம் : மேடம்! முன்னாடியே பேசுன மாத்திரி நாங்க ஒரு குழந்தைய தத்தெடுத்துக்க விரும்புறோம். ஸ்வேதாக்கு திவ்யாவை பிடிச்சிருக்கு.

(ராம் ஸ்வேதாவும் திவ்யாவும் மிட்டாய் தின்று கொண்டிருந்த திசையை காட்டினான்).

சகோதரி : திவ்யா? இல்லத்தின் மிக அருமையான செல்லக் குழந்தை அவள். தேவன் அவளின் பெற்றோரை இங்கே அனுப்பி வைத்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.  சில கையெழுத்துக்கள், சில படிவங்கள், அதற்கு பிறகு உங்கள் திவ்யாவை நீங்கள் கூட்டி போகலாம் ராம்.

சகோதரி ராமிடமும், ஸ்வேதாவிடமும் விதி முறை படிவங்களை படிக்கக் கொடுத்தார். படித்து பார்த்துவிட்டு, ஒப்புதல் கையெழுத்து போட்டு தங்கள் பிள்ளையை தனதாக்கிக்கொண்டார்கள் ராமும் ஸ்வேதாவும்.

ஸ்வேதா எழுந்து விளையாடிக்கொண்டிருந்த திவ்யாவின் அருகில் சென்றாள்.

ஸ்வேதா : செல்லம்!

திவ்யா : ஏ! செல்லம்!!  *கன்னக் குழி விழுக சிரித்தாள்*

ஸ்வேதா : என்ன உனக்கு புடிச்சிருக்கா? என் கூட வரியா? உனக்கு நிறைய மிட்டாய், விளையாட பொம்மை, படிக்க புக் எல்லாம் தருவேன்.

திவ்யா : என்ன மட்டும் தான் கூட்டிட்டு போவிங்கள? அனிதா, அபி, ராஜு, அவங்களை எல்லாம்?

ஸ்வேதா  : நாம வார வாரம் வந்து அவங்க கூடே எல்லாம் விளையாடலாம்.

திவ்யா : சூப்பர். நான் உன்ன எப்படி கூப்பிடனும்?

ஸ்வேதா : அம்மா!

திவ்யா : அப்படின்னா என்னது?

ஸ்வேதா : வா நான் உனக்கு அதை காட்டுகிறேன்.

திவ்யா சிரித்துக்கொண்டே ஸ்வேதாவிடம் தாவிக் குதித்தால்.

ராமும் ஸ்வேதாவும் தங்கள் சந்தோசத்தை தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றார்கள்.
பிள்ளை பெற்று
மடி சுரக்கத்தேவை இல்லை.
அன்பு சுரக்கும்
யாருமே மலடும் இல்லை. ♥
P.s. - பிள்ளை பிறக்கவில்லை என்றால் வருத்தம் எதற்கு? உங்கள் குழந்தை உங்கள் வயிற்றில் பிறக்க வேண்டுமென்றில்லை. ஏற்கனவே பிறந்து உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கலாம். போய் உங்கள் சந்தோசத்தை வீட்டிற்கு அழைத்து வாருங்கள்.

oOo

இந்தக் கதை எழுத காரணமானது இருவர்.

ஒருவர் என் நண்பனின் சொந்தக்காரர். குழந்தை செல்வம் மட்டும் இல்லாத பணக்காரர். அவங்க வீட்டுல இப்ப பாக பிரிவினை முடிந்து அன்பை தவிர எல்லாம் தர நிறைய பேர் தயாராக இருக்கிறார்கள். இவர்களின் பங்கு இவர்களுக்கு பின்னால் நிறைய பேருக்கு தேவை படுக்கிறது. ஆனால் இவர்களுக்கு முதுமையில் தேவைப்படும் அன்பை தர யாரும் தயாராக இல்லை. நண்பனன் தரலாம் என்று நினைத்தால், எங்கே சொத்து பங்கிற்கு நண்பன் வந்து விடுவானோ என்று சொத்துக்கு அடித்துக்கொள்ளும் பக்கிகளின் நச்சுப்பார்வைக்கு ஆளாக வேண்டி இருக்கிறது. பணத்தையும், சொத்தையும் தின்ன மனிதன் கரையான் இல்லை என்பதை என்று புரிந்து என்று கொள்வான்?

இன்னொருவர், என் ஊர் மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட அக்கா. குழந்தை இல்லை. கணவன் இறந்த ஒரு வாரத்தில் தனிமையின் கொடுமையால் தற்கொலை. கணவன் இருந்த வரை எல்லா கோவில்களிலும் மாலையில் பூஜை, வரும் குழந்தைக்களுக்கு மிட்டாய் என்று போய்க் கொண்டிருந்த இவர்களின் வாழ்கை, இப்படி முடிந்தது என்று நினைக்கையில் இரவு தூக்கம் வர மறுக்கிறது. ஒருவன் தானாக சாகத்துனிகிறான் என்றால், அவன் வாழும் உலகத்தை ரொம்ப கொடூரமாய் மாற்றி விடுகிறோம் நாம்.

இந்த உலகத்துல எந்த செல்வமுமே குறைவாக இல்லை. நாம் கொடுப்பதற்கு/பகிர்ந்துகொள்வதற்கு மனமில்லாமல் இருக்கிறோம். அவ்வளவு தான்.

Belated Mother's and Father's day wishes :)
பிழைக்களுக்கு மன்னிக்கவும்.

No comments:

Post a Comment